தமிழ்நாடு பட்ஜெட் நேரலை


நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு. எழும்பூர், சென்ட்ரல் நிலையங்கள், மெரினா, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் 100 பகுதிகளில் நேரலை செய்யப்படுகிறது


ரூ.65 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை


தங்கம் விலை மீண்டும் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 64 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் விலை 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120 ரூபாய் ஆக உள்ளது. 



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி


சென்னை அடுத்த திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் பாலமுருகன் என்பவர் சுமார் ரூ.5 கோடி வரையிலான கடன் சுமை காரணமாக, மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


AC பேருந்திலும் வருகிறது பஸ் பாஸ் முறை..!


சென்னையில் மாதம் ₹2000 பஸ் பாஸ் முறையில் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மாநகர | பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்துத்துறை திட்டம்! தற்போதுள்ள ₹1000 பாஸில் ஏசி பஸ் தவிர்த்து மற்ற பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் எனத் தகவல்


மாயமாகும் காயங்கள்


மனித தோலில் உள்ள அம்சங்களை உள்ளடக்கி, ஹைட்ரஜெல் பயன்படுத்தி,செயற்கையான தோலை உருவாக்கி அசத்தியுள்ளனர் ஆல்டோ மற்றும் பேய்ரூத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது 4 மணி நேரத்தில் காயங்களை 90%-மும், 24 மணி நேரத்தில் முழுமையாகவும் குணப்படுத்திவிடுமாம். மனித தோல்களில் இருப்பதைப் போலவே வலிமை, உணர்ச்சி, சுயமாக குணப்படுத்தும் திறன் உள்ளிட்டவை இதிலும் உண்டு என தெரிவிக்கின்றனர்.


தெலங்கானா முதலமைச்சருக்கு அழைப்பு!


சென்னையில் வரும் 22ம் தேதியன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைக்கின்றனர் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி. புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க திட்டம்.


தார்பாய்கள் கொண்டு மூடப்படும் மசூதி


உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தார்ப்பாய்கள் கொண்டு மூடப்படும் மசூதிகள். ஹோலி பண்டிகை நாளில் மார்ச் 14 (வெள்ளிகிழமை) 'சவுபாய்' என்ற பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கான பாதையில் பள்ளிவாசல்கள் உள்ளதால் திரையிட்டு மூடுவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு


சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்!


விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மீண்டும் தள்ளிப்போனது. இவரை அழைத்து வருவதற்காக இன்று புறப்பட வேண்டிய ஸ்பேஸ் X டிராகன் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்படவில்லை. இது சென்றிருந்தால், 9 மாதங்களாக விண்வெளியில் இருக்கும் இவர், வரும் 16ம் தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியிருப்பார்


2027 உலகக் கோப்பையில் ரோகித்


2027 உலக கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணிப்பு! “அவர் சாம்பியன்ஸ் டிராஃபியின் இறுதிப்போட்டியில் விளையாடியதைப் பார்க்கையில், 'நான் இன்னும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன்' என்பதை உணர்த்துவது போலிருந்தது. விளையாட்டில் சிறந்து விளங்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் வீரரின் ஓய்வுக்காக காத்திருப்பார்கள். அது ஏன் என்று தெரியவில்லை” எனவும் கூறியுள்ளார்


சஞ்சு சாம்சன் வருத்தம்


"RR குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்தவர் பட்லர். IPLல் ஒரு விதியை மாற்றும் வாய்ப்பு கொடுத்தால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீரர்களை விடுவிக்கும் விதியை மாற்றிவிடுவேன். தனிப்பட்டி முறையில் வீரர்களுடன் நல்ல உறவை கட்டமைத்து, |பிறகு அவர்களை விடுவிப்பது கடினமான முடிவுதான்"- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லரை விடுவித்தது குறித்த கேள்விக்கு கேப்டன் சஞ்சு சாம்சன்