கரூரில் தக்காளி விலை ஏறுமுகம்


கரூரில் தக்காளி விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் தக்காளி விலைதொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 வரை விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை சென்றது. தக்காளி விலை சற்று குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் தக்காளி விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் கரூர் தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.140 வரை தக்காளி விற்பனையானது. அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இதர பகுதிகளில் இருந்து இன்னும் போதிய அளவுக்கு வரத்து இல்லாததால், தக்காளி விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


 






கரூரில் சின்ன வெங்காயத்தின் விளையும் அதிகரித்துள்ளது.


ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150 க்கு விற்பனை ஆனது. தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பீன்ஸ், கோழி அவரைக்காய், ஆகியவற்றின் விலை ஏற்கனவே ரூ.100 -ஐ கடந்து விற்பனை ஆகின்றன. கரூர் தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை விவரம் வருமாறு (1 கிலோ) : பெரிய வெங்காயம் பீன்ஸ் ரூ.160 க்கும், கோழி அவரைக்காய் ரூ.160 க்கும், பெரிய வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.80 க்கும், பீட்ரூட் ரூ. 60 க்கும், புடலங்காய் ரூ. 60 க்கும், உருளைக்கிழங்கு ரூ.40 க்கும், ஊட்டி உருளைக்கிழங்கு ரூ. 40-க்கும், வெண்டைக்காய் ரூ.50 க்கும், கத்திரிக்காய் ரூ.60 க்கும், பீர்க்கங்காய் ரூ.60 க்கும், பட்டை அவரைக்காய் ரூ.80 க்கும், சுரைக்காய் (ஒன்று) 20 க்கும், இஞ்சி ரூ.350 க்கும் விற்பனையானது.


 





 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண