Toll Fee Hike: செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு? - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?

சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும் நிலையில் சுங்கக் கட்டணமும் உயர்ந்து வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Continues below advertisement

சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதன் மூலம் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றது. நெடுஞ்சாலைகள், மாநிலங்களுக்கு இடையேயான விரைவுச் சாலைகள், டர்ன்பைக்குகள், சுரங்கங்கள் மற்றும் பாலங்கள் போன்ற சில சாலைகளில் விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும். குறிப்பாக இந்த கட்டணங்கள் சாலை உட்கட்டமைப்பைப் பராமரிக்கவும், மேம்படுத்தவும் பயன்படுகின்றது. இது டோல், டோல்-டாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணமானது உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடிகளில் லோக்சபா தேர்தலுக்கு பின் ஜூன் 3 ஆம் தேதி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.  சிந்த சூழலில் தற்போது பல சுங்கச்சாவடிகளில் செப் 1 ஆம் தேதி உதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

LIVE | Kerala Lottery Result Today (27.08.2024): கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430.. முதல் பரிசு ரூ. 75 லட்சத்தை தட்டி தூக்குபவர் யார்?

குறிப்பாக 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது. அதாவது விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, சென்னசமுத்திரம், கொடைரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டண்டி, நாதக்கரை, பாளையம், புதூர் பாண்டியபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில்  சுங்கக்கட்டணம் உயர உள்ளதாக தெரிகிறது, இதனால் டயர்களுக்கு தகுந்தவாறு வாகன ஓட்டிகள் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  சுங்கக் கட்டணம் விலை உயர்வு நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும் சாலையை அமைப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்த பின் சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் இந்த விதியை பின்பற்றாமல் கட்டணம்  ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.  சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும் நிலையில் சுங்கக் கட்டணமும் உயர்ந்து வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

சுங்கக்கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழல் இருப்பதாக அமமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருவதோடு, சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கி கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

Continues below advertisement
Sponsored Links by Taboola