கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமெனவும், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சமீபத்தில் கரையை கடந்த புயல்

வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த முரசு புயலானது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 3-ஆம் தேதியன்று அதிகாலை நேரத்தில் ஆந்திர மாநிலம் ஒங்கோலுக்கு மிக அருகில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.