கொரோனாவில் இரண்டாவது அலை தீவிரம் சற்று குறைந்துள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வெளியில் சென்றுவருகிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று பலருக்கு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.


அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா விவரத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் மொத்தம் 875 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 27,07,368 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


 






இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்று 522 ஆண்களுக்கும், 353 பெண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையிலிருந்து இன்று 1,012 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.