வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்து 10.5 % இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் அறிவித்தது.


இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன. இதில் கள்ளக்குறிச்சி, சேலம், என தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


இதேபோல் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பெண்ணாடம் , பண்ருட்டி  மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் சுமார் 11 தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் மர்ம நபர்களால் கல்வீச்சு நடத்தப்பட்டது, இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.




இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வெளியிட்ட அறிக்கையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 13 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சட்ட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த 23 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.


தமிழக அரசு வன்னியர்களுக்காக 10.5 இடஒதுக்கீடு தமிழக அரசு பிறபித்த அரசானையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது சம்பந்தமாக, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் பெரியகொமுட்டி பேருந்து நிறுத்தம், வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தம், சின்னாண்டியாங்குப்பம் இரயில்வே கேட், விருத்தாச்சலம் பேருந்து நிலையம், வயலூர் மேம்பாலம், சின்ன கொசபள்ளம் பேருந்து நிலையம், பாலகொல்லை ஆரம்ப சுகாதார நிலையம், ஓரையூர் பேருந்து நிலையம், திருமாணிகுழி பாலம், பல்லவராயநத்தம் பேருந்து நிலையம், கொடுக்கம்பாளையம் பள்ளி அருகில். அன்னகாரங்குப்பம் பாலம். சங்கொலிகுப்பம் பேருந்து நிலையம் ஆகிய 13 இடங்களில் அரசு பேருந்துகளில் கண்ணாடி உடைத்து. பொது சொத்துகளை சேதப்படுத்தி. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூர்களை ஏற்படுத்தியவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய பிறப்பித்த உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.