உலகமே உற்று எதிர்ப்பார்க்கும் சந்திரயான் 3 நாளை மதியம் 2.35 மணியளவில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று மதியம் 1.05 மணிக்கு தொடங்குகிறது.
நாளை விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3 க்கான இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். அப்போது மினியேச்சர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 வடிவத்தை உடன் கொண்டு சென்றனர். வழக்கமாக எந்த ஒரு விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி எழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதே போல் இந்த முறையும் இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பது எழுமையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர், அப்போது இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக மினியேச்சர் சந்திரயான் 3 –யை சாமி முன் வைத்து தரிசனம் செய்தனர்.
கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். அந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கு ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் lvm3 உடன் இணைக்கப்பட்டது. தற்போது திட மற்றும் திடவ எரிப்பொருள் நிரப்பும் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை சரியாக மதியம் 2.30 மணியளவில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்.