TN Rain Alert :  தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  


19 மாவட்டங்கள்:


23.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


24.04.2023 முதல் 26.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


27.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை : 


23.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
கொமுகி அணை (PWD) (கள்ளக்குறிச்சி) 13, வால்பாறை PAP (கோவை), மோகனுர் (நாமக்கல்) தலா 6, வால்பாறை தாலுகா  அலுவலகம் (கோவை) 5,  திருவாரூர், வால்பாறை PTO (கோவை), சின்னக்கல்லார் (கோவை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 4, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), விரிஞ்சிபுரம்  AWS (வேலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 3, கிருஷ்ணராயபுரம் (கரூர்), பெரியார் (தேனீ), பொன்னேரி (திருவள்ளூர்), மாயனுர் (கரூர்), ஆவடி (திருவள்ளூர்), சிவகாசி  (விருதுநகர்), பூந்தமல்ல்லி ARG (திருவள்ளூர்) தலா 2, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), தம்மம்பட்டி (சேலம்), எமெராலட் (நீலகிரி), திருப்பத்தூர்  PTO (திருப்பத்தூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), பூந்தமல்லீ  (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), திருப்பத்தூர், மணிமுத்தாறு  (திருநெல்வேலி) ,செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), மங்களாபுரம் (நாமக்கல்), உசிலம்பட்டி (மதுரை), தளி (கிருஷ்ணகிரி), அமராவதி  அணை (திருப்பூர்), செம்பரபக்கம் (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை), கரூர், சோழவரம் (திருவள்ளூர்), மஞ்சளர் (தேனீ), சோலையார் (கோவை), ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 1. 
     


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.