வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், வருகிற 28-ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரவு முதல் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

Continues below advertisement

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

மதுரை ,தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி,கரூர் பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, திருப்பூர், நீலகிரி, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,விழுப்புரம்,வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,நாமக்கல்,சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Continues below advertisement