தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து முழுவதும் விலகி விட்டதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது இயல்பை விட மழைப் பொழிவு அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து முழுவதும் விலகி விட்டதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு மட்டுமல்லாது, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயல்சீமா, கர்நாடகாவின் உள் தெற்குப் பகுதிகள் மற்றும் கேரளா-மாஹே ஆகிய பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் 19-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 19-ம் தேதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்றும் நாளையும், தமிழ்நாடு மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்டமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, தென் தமிழக கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்டமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால்,  அந்த தேதிகளில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை காட்டுப்பள்ளி முதல் கூடுதலை வரையிலான கடல் பகுதிகளில் அலையில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.