தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாக்குமரி, தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26டிகிரி செல்சியஸாக இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.