பராமரிப்பு பணி காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், மின்தடை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில், அவசர கால பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

கூடுவாஞ்சேரியில் மின்தடை - Guduvancheri Power Shutdown 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (22-03-2025) மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மறைமலைநகர் உட்கோட்ட செயல் பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் உட் கோட்டத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி பகுதியில் 33 கிலோ வாட் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை இதில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின் தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன ? Power shutdown affected area in Guduvancheri 

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், நந்திவரம், ஆதனூர், ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி, எம்.ஜி. நகர், பெரியார் நகர், சிற்பி நகர், கணபதி நகர், சீனிவாசபுரம், காமராஜபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. 

இதேபோன்று காரணைப் புதுச்சேரி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, டி.டி.சி நகர், கன்னியப்பன் நகர், காமாட்சி நகர், கபாலி நகர், ஜவவாரியா நகர், பிரியா நகர்,, ரயில்வே கேட் மற்றும் ரயில்வே ரோடு, அம்பேத்கர் நகர், விஷ்ணு பிரியா நகர், ராணி அண்ணா நகர், சதுரப்பன் தாங்கள், பாலாஜி நகர், பெருமாட்டுநல்லூர், பாண்டூர், தங்கபபாபுரம், மூலக்கழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்தடை ஏற்படும் நேரம்:

கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 இடங்களில் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின் தடையை கருத்தில் கொண்டு கூடுவாஞ்சேரி மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டுமென மின்சார வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.