தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. 

Continues below advertisement

29 மாவட்டங்களில் மழை:

இந்த நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 

"செங்கல்பட்டு. சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

புயல் இல்லை:

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாது என்றும், புயல் உருவாகாது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதேசமயம், மழை தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக பெய்யும்" என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழ்நாடு - புதுச்சேரி - தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் மழை காரணமாக சாலைகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன. தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதை வடியவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களிலும், வெள்ள அபாயம் உள்ள அணை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை அபாயத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.