சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் நாளை மறுநாள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 16ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.