தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் போது மூன்று மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


 


தேர்தல் தொடர்பாக நடைபெறும் உள்ளரங்கு கூட்டங்களுக்கு மாவட்ட துணை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அல்லது கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய குழுக்களாக சென்று பிரச்சாரம் செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.