கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், அதன் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மாநகராட்சிக்கு தேர்தல் தேதி அறிவித்தார் திமுக சார்பாக மேயர் பதவிக்கு தாரணி சரவணன் என்பவர் பெயரும், சில மூத்த நிர்வாகிகள் பெயரும் இடம்பெற்றது. இந்த நிலையில் திடீரென தமிழ்நாடு அரசு கரூர் மாநகராட்சி பெண் மேயர் என அறிவிப்பை வெளியிட்டனர்.


 




இந்நிலையில் நகர்ப்புற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் வார்டு ஒதுக்கீடு பணிகளை திமுக மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். அப்போது விடுதலை சிறுத்தை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி என கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 வார்டுகளும் , காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.


 




கரூர் மாநகராட்சி 48 வார்டு பகுதியில் 41 வார்டு பகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதியது. கடந்த மாதம் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் வாபஸ் பெற்ற நிலையில் கரூர் மாநகராட்சி 22வது வார்டு பிரேமா சங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி கரூர் மாநகராட்சி 47-வார்டு பகுதிகளுக்கான வாக்குப்பதிவு 91 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.



அதைத்தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி மாநகராட்சிகள் பதிவான வாக்குகள் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் கட்சியான திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர். மதியம் 3 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. அதில் திமுக 42- வார்டுகளிலும், கூட்டணி கட்சிகள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட்) 2 வார்டுகளிலும், சுயச்சை 2 வார்டுகளிலும், அதிமுக 2வகைகளிலும் வெற்றி பெற்றது. கரூர் மாநகராட்சி தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்ற நிலையில் முதல் பெண் மேயரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.



இப்படிப்பட்ட சூழ்நிலையில் கரூர் மாநகராட்சி முதல் பெண் மேயராக 3 பேர் களத்தில் தற்போது உள்ளனர்.


கரூர் மாநகராட்சி 4-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கவிதா கணேசன் என்பவரும், மாநகராட்சி 12-வது வார்டு பகுதியில் தென்னை மர சின்னத்தில் வெற்றி பெற்ற மஞ்சுளா பெரியசாமி என்பவருக்கும், மாநகராட்சி 34-வது வார்டு திமுகவில் வெற்றிபெற்ற தெய்வானை என்பவருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக திமுக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக- திமுக 4-வது வார்டு வேட்பாளர் கவிதா கணேசன் கடந்த காலங்களில் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி என்ற நிலையில் தேர்தல் நடைபெற்ற போது இனாம் கரூர் நகராட்சியில் திமுக சேர்மனாக ஐந்தாண்டு பணிகளை நிறைவு பெற்றுள்ளார். அதே நிலையில் அவருடைய கணவர் கணேசன் தற்போது வடக்கு நகர திமுக செயலாளரும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் விசுவாசம் மிக்க நபராக திகழ்கிறார். ஆகவே கவிதா கணேசனுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.




அதே போல் கரூர் மாநகராட்சி 34-வது வார்டு திமுக வேட்பாளரான தெய்வானைக்கும் மேயர் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. காரணம் திமுக வேட்பாளர் தெய்வானையின் மாமனார், கணவர், கொழுந்தனார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் திமுக கட்சியிலேயே ஆரம்பம் முதல் பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என திமுகவில் கட்சிப் பணி ஆற்றி உள்ளனர். வேட்பாளர் தெய்வானை மிகவும் எளிமையானவர். ஆகவே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என அனைவரின் எதிர்பார்ப்பு.



அதேபோல் கரூர் மாநகராட்சி 12-வது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் தனது தாய்க்கு சீட் கேட்டு கிடைக்காத நிலையில் அதே 12வது வார்டு பகுதியில் திமுக ஆதரவுடன் தனது தாயை நிறுத்திய காங்கிரஸ் மாவட்ட இளைஞர் காங்கிரசின் கீர்த்தன் பெரியசாமியை எம்பி  ஜோதிமணி பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய தாயான மஞ்சுலா பெரியசாமிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளராக அப்பகுதியில் திமுக நிர்வாகிகள் இணைந்து பணியாற்றியுள்ளார். இவருடைய வெற்றிக்கு திமுக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் இவர் அமைச்சர் ஆதரவால் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் திமுகவில் இணைந்து மேயராக வாய்ப்பு இருப்பதாகவும், இல்லை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாவட்டத்தில் கூட்டணி தர்மத்துக்காக காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




எனினும் நாம் குறிப்பிட்டுள்ள மூன்று பெண் வேட்பாளர்களுக்கு மேயர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதே நிலையில் இளம் பட்டதாரி வேட்பாளர்களுக்கு இந்த முறை கரூர் மேயர் வாய்ப்பு வழங்க சில திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு ஆலோசனை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே கரூர் மாநகராட்சி பெண் மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.