தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பார்வையாளர்கள் பல பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56 வது வார்டு கருமண்டபம் பகுதியில் தீப்பட்டி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் கவிதா பெருமாள் எல்லாரையும் போல பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.




இதனை தொடர்ந்து வேட்பாளர் கவிதா பெருமாளின் ஆதரவாளர்களான சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மாந்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்படி ஆயிரம் ரூபாயை குமார் என்பவரிடம் கொடுத்த போது, பொதுமக்கள் அந்த நால்வரையும் துரத்தி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடினார்.




இதில் சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரையும் பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை கேள்விபட்ட திமுக, அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்தல் படை அதிகாரி ராஜ்குமார் புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்ததால் போராட்டத்தை அரசியல் கட்சியினர் கைவிட்டனர்.


இறுதிக்கட்ட பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: -


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வந்தார். அந்தவகையில் இன்று நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பரப்புரை செய்தார். அதில், “இந்திய சுதந்திர வரலாற்றில் மட்டுமல்லாமல் திமுக வரலாற்றிலும் நெல்லை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேரறிஞர் அண்ணா நெல்லை வந்து எழுச்சியை ஏற்படுத்தினார்.மேலும் அண்ணாவுடன் இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் புரட்சி கனலை ஏற்படுத்த நெல்லை சீமை வித்திட்டது. 


மன்னர் ஆட்சிக்காலத்திலும் நெல்லை சீமை எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் இருந்தது. திருவாரூரில் ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்தவர் மட்டுமல்ல, நெல்லையப்பர் கோயிலில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டவர் தான் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர். ஆட்சிக்கு வந்த ஒன்பது மாதத்தில் பத்து ஆண்டுகளில் அதிமுக செய்யமுடியாத சாதனையை திமுக செய்துள்ளது.ஆனால் எதுவும் செய்யவில்லை என்று எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி பேசி வருகிறார், அவரை பச்சை பொய் பழனிச்சாமி என்று முதலமைச்சர் முகஸ்டாலின் விமர்சனம.


திமுக ஆட்சியில் என்ன செய்தோம் என மக்களை களத்தில் சந்தித்து எடப்பாடி பழனி சாமி கேட்கட்டும்.அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என போத்தாம்பொதுவாக சொல்லாமல் ஆதாரப்பூர்வமாக  தெரிவிக்கிறோம்.


அதிமுக ஆட்சியில் பரமக்குடி துப்பாக்கி சூடு,தூத்துக்குடி துப்பாக்கி சூடு,சாத்தான்குளம் படுகொலை என பல நிகழ்ந்தது. காவல்துறை கட்டுபாட்டில் உள்ள சாத்தான்குள்ம் காவல் நிலையத்தை வருவாய் துறை கட்டுபாட்டில் எடுத்து இயக்ககூடிய நிலை அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொலை கொள்ளை என தான் செய்திதாள்களில் தலைப்புகளாக இருந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை பீடமான தலைமை செயலகத்தில் ரையிடு நடந்தது அதிமுக ஆட்சியில் தான். தலைமை செயலகத்தில் ரைடு நடந்தது வரலாற்றில் அழிக்கமுடியாத கரையாக மாறியது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கிறது கொட நாட்டில் நடந்த சம்பவம். ஜெயலலிதா மறைந்த நள்ளிரவில் கொடநாட்டின் 9 வது வாயில் 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவம் நிகழ்த்தியது. அப்போது பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.











திமுக ஆட்சிக்கு வந்த போது பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக இருந்தது, ஆனால் நாட்டிற்கு முன்னோடியாக பெட்ரோல் விலை திமுக அரசு குறைத்தது. பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டாகி இருப்பதாக சொல்வது போன்று. கடந்த ஆட்சியில் போடப்பட்ட 868 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கதொகை, மீனவர்களுக்கான நிதி உயர்த்தபட்டுள்ளது, மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் பயன்படுத்தும் பஞ்சுக்கான 1% வரி குறைப்பு,13 லட்சம் பேரின் நகை கடன் ரத்து ஆகியவை வழங்கப்பட்டு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் கேட்கட்டும்.


மக்களை தேடி மருத்துவம் இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர். 1 மணி நேரம் செலவு செய்து நாங்கள் சொன்ன திட்டங்களை மக்களிடம் கேட்டு தெரிந்தால் 9 மாத திமுக ஆட்சியில் என்ன செய்தது என தெரியும். வேலைக்கு செல்லும் பெண்கள்,காய்கறி,மீன்,பழ வியாபரம் செய்யும் பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்து பயன் பெருகிறார்கள். 76 கோடியே 64 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்து பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் 1226 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இழப்பாக இதனை நாங்கள் பார்க்கவில்லை பெண்கள் முன்னேற்றத்தின் ஒரு படியாக பார்க்கிறேன்.



தமிழக அரசின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு ஸ்டேபன் என்ற வெளிநாட்டு பயணி திமுக அரசுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு உள்ளார். 2011 ஆட்சிக்கு  வரும் போது 1 லட்சம் கோடி இருந்தது 5 லட்சம் கோடியாக உயர்த்தி கடனாளி மாநிலமாக ஆக்கியது அதிமுக ஆட்சி. அதை திமுக அரசு சரி செய்து வருகிறது. அதிமுகவின் கொத்தடிமை கூட்டத்திற்கு திமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது. அனைத்து திட்டங்களிலும் அதிமுக அமைச்சர்கள் ஊழல் மோசடி செய்துள்ளனர்.


இந்த மோசடிக்காக தான் கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். தமிழகத்தின் கருப்பு பக்கத்தில் பதிவான முகங்கள் அதிமுக ஆட்சியாளர்களுடையது என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். பல ஊழல்கள் செய்துவிட்டு நல்லவர் போல் இந்த தேர்தலில் மக்களை சந்திக்க அதிமுகவினர் வந்துவிட்டனர். மக்கள் அதிமுக அரசில் செய்த ஊழல்கள் எதையும் மறக்கவில்லை .


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைவருக்கும் விடியல் தரும் ஆட்சியாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு வாய்ப்புளியுங்கள். மதச்சார்ப்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் தான் உங்களுடைய சின்னங்கள். அவற்றிற்கு வாக்களித்து எங்களை மாபெரும் வெற்றி அடைய வையுங்கள். ” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண