TN Rain Update: சென்னையில் இன்று  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.


சென்னையில் மழை:


சென்னையை பொறுத்தவரையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், காலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் வேலைக்கு புறப்பட்டோர் ஆங்காங்கே சாலையோரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:


வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. அதேபோல, வரும் நவம்பர் 14 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


10.11.2024: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


11.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


12.11.2024: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


13.11.2024: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


 


புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி:


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கூறப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். பின்னர், அது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோரப் பகுதி நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.