TN Chennai Rain Update: சென்னையில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.


சென்னையில் விடிய விடிய மழை:


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


பரவலான மழை


வடபழனி, கோடம்பாக்கம், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், ஆயிரம்விளக்கு, மாம்பலம், ஆலந்தூர், கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர், மேடவாக்கம், என பல்வேறு பகுதிகளில், நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்கிறது. வடகடலோர மாவட்டங்களில் இடி,ம்ன்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.. ஏற்கனவே, நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:


மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக. அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பதிைகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உவைாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பதிைகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.


12.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


13.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர்,  சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


14.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுறை. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி. கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


15.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாதடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தேனி, தென்காசி. தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பதிைகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னை  வானிலை மன்னறிவிப்பு:


அத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பலதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33* செல்சியஸை வட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இலக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக கடலோரப்பதிகள்


12.11.2024 முதல் 13.11.2024 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மண்னார் வளைடைா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுத்கள்:


12.11.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்க 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.