TN Rain Alert: இத்தனை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை மையம்

TN Rain Alert: 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

TN Rain Alert: 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 11மாவட்டங்களில் இன்றும், 23 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கன்னியாகுமரி, தென்காசி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், நிலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்குபகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்ட வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola