TN weather Report OCT.28: மோந்தா புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை நோக்கி நகரும் மோந்தா புயல்
வங்கக் கடலில் உருவாகிய மோந்த புயல் தொடர்ந்து ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு இந்த புயல் கரையை கடக்கும் என்றும், அப்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புயலின் தாக்கமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மழை - பள்ளிகளுக்கு விடுமுறை
வானிலை மையத்தின் எச்சரிக்கையின்படியே, சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதலே தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்க, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழைக்கான எச்சரிக்கை:
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புயலின் தாக்கம் காரணமாக இன்று தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் ராயலசீமா மற்றும் தெலுங்கானாவில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள,; சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், தமிழ்நாடு, கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் வடக்கு உட்புற கர்நாடகா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கரையை கடக்கும் புயல்:
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் 17 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்த "மோன்தா" புயல், மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில், நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஒரு கடுமையான சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்றே மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
நாளைய வானிலை நிலவரம்:
நாளை கடலோர ஆந்திராவில் ஓரிரு இடங்களில் மிக கனமழையுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தெலுங்கானாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.