TN weather Report: சென்னையில் நள்ளிரவு முதலே லேசானது முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Continues below advertisement

வானிலை மையம் எச்சரிக்கை:

மண்டல வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

Continues below advertisement

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கான வாய்ப்புகள்:

19-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிற இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் விடாது மழை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கி தற்போது வரையிலும் கூடா லேசானது முதல் மிதமான மழை தொடர்ந்தபடியே உள்ளது. கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி,நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்கிறடு. இதேபோன்று குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீரும் தேங்க தொடங்கியுள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, இன்று சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னதுடன் கூடிய வேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32' செல்யெஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

18-10-2025 முதல் 21-10-2025 வரை: தென்தமிழக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.