TN Rain Update:  தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
26.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


27.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


28.03.2023 முதல் 30.03.2023 வரை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான /  மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 






கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


பேரையூர் (மதுரை), காரியகோவில் அணை (சேலம்) தலா 3, சங்கரன்கோவில் (தென்காசி), பாப்பரப்பட்டி KVK (தர்மபுரி) தலா 2, மரண்டப்பள்ளி (கிருஷ்ணகிரி), ஷூலகிரி  (கிருஷ்ணகிரி), சூலூர் (கோவை), சின்னக்கல்லார் (கோவை), ஏற்காடு (சேலம்), பொள்ளாச்சி (கோவை), கீரனுர் (புதுக்கோட்டை) தலா 1 என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


தொடர்ந்து அதிகரிக்கும் அணையின் நீர்வரத்து.. முல்லை பெரியாறு உட்பட தேனி மாவட்ட அணைகள் நிலவரம்!


LVM3 Rocket Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம். 3 ராக்கெட்..! 36 செயற்கை கோள்களுடன் பயணம்..!