இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அனைத்து கட்சிகளும் பிசியாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களையை அறிவித்தது வருகிறது. மேலும், தொடர்ந்து பத்தாண்டு ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
அதேபோன்று கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியும் இம்முறை ஆட்சி கட்டில் அமரவேண்டும் என்ற முனைப்பில் மாபெரும் கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கடந்த சில மாதங்களாக அதிமுகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்கு காரணமாக மதிமுக மாவட்ட செயலாளராக இருந்த அதிமுகவில் இணைந்துள்ள மார்கோனி தான் காரணம் என அப்பகுதி அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதிமுக டூ அதிமுக:
அதிமுகவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியதை அடுத்து அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீக்கினார். அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் மார்கோனி அதிமுகவில் இணைந்தார். அவர் அதிமுகவில் இணைந்த நாள் முதல் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானோர்களை அதிமுகவில் இணைத்து வருகிறார். முன்னதாக படிப்படியாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில் கட்சியில் இணைத்துள்ளார்.
அதிமுகவில் இணைய உள்ள 3000 இஸ்லாமியர்கள்:
இந்நிலையில் மீண்டும் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 ஆயிரம் இஸ்லாமியர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைக்க உள்ளார். இதற்கான பணிகள் தற்போது சீர்காழியில் நடைபெற்ற வருகிறது. இதற்காக சீர்காழியில் பிரம்மாண்ட இணைப்பு விழா வருகின்ற பிப்ரவரி 18 -ம் தேதி சீர்காழி இமையவர்மன் கார்டனில் நடைபெற உள்ளதாகவும், இவ்விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொள்ள உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அதிமுக, திமுக என மாறி மாறி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும், சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுகவிற்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படும் தொகுதி, இந்த சூழலில் அதனை மாற்றும் விதமாக தற்போது மதிமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த மார்கோனியின் முயற்சியால் சீர்காழி சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டையாக மாறி வருவதாக பொதுமக்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
பாஜகவின் திருவிளையாடல்.. சிக்குவாரா சந்திரபாபு நாயுடு? பரிதாப நிலையில் I.N.D.I.A கூட்டணி!