Police Vehicle Spares Auction: தமிழக காவல்துறை வாகனங்களின் உதிரிபாகங்களின் ஏலம், வரும் 10ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.


தமிழக காவல்துறை அறிவிப்பு:


தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம் அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் எதிர்வரும் 10.09.2024 மாலை 04.00 மணியளவில் சென்னை – 08, எழும்பூர், CBCID வளாகத்தில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 10.09.2024 ஆம் தேதி மாலை 04.00 மணிக்குள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு. இரண்டு நாட்களுக்குள் அதற்கு உண்டான GST தொகையை அவரவர் GST கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


அதன்பின்னர் வாகனத்தின் பழைய உதிரி பாகங்களின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு
முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் . விபரங்களுக்கு தொலைபேசி
எண்கள் 9952022860 / 9962488150” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI