போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அவர் பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டார்.


இந்நிலையில், தனியார் தொலைகாட்சியைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி கேட்க முயற்சித்தபோது, பதிலளிக்க மறுத்த அவர், கேமராவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


“லஞ்ச புகார்களில் சிக்கி இருக்கும் போக்குவரத்து ஆணையர் நடராஜன் வெறும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கையா?” என அந்த செய்தியாளர் அமைச்சர் ராஜ கண்ணப்பன்னிடம் கேட்டிருக்கிறார்.  அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், பெண் நிரூபரின் கேமராவை கோபமாக தாக்கிய காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் செய்தியாளர் ஷில்பா, அமைச்சர் பதில் சொல்ல மறுத்தது மட்டுமின்றி கேமராவை தாக்கிவிட்டுச் சென்றதாகவும் பதிவு செய்திருக்கிறார்.






போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் இருந்தபோது, துணை ஆணையராக இருந்த நடராஜன் என்பவர் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அவரிடம் இருந்து 2 பணம் என்னும் இயந்திரங்கள், 35 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது. 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண