தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர் விபரம் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் குறித்த விபரம் இதோ:
வ.எண் |
ஒன்றியம் |
ஆண் வாக்காளர் |
பெண் வாக்காளர் |
இதர வாக்காளர் |
1 |
ஆலங்குளம் |
55,551 |
58,816 |
4 |
2 |
கீழப்பாவூர் |
53,901 |
55,799 |
8 |
3 |
கடையம் |
47,282 |
49,530 |
3 |
4 |
மேலநீலிதநல்லூர் |
30,551 |
32,604 |
2 |
5 |
வாசுதேவநல்லூர் |
30,506 |
32,291 |
0 |
6 |
தென்காசி |
25,064 |
25,684 |
3 |
7 |
செங்கோட்டை |
11,589 |
11,744 |
0 |
8 |
கடையநல்லூர் |
33,379 |
34,191 |
1 |
9 |
சங்கரன்கோவில் |
43,624 |
44,743 |
0 |
10 |
குருவிகுளம் |
43,350 |
46,169 |
3 |
|
மொத்தம் |
3,74,797 |
3,91,571 |
24 |
|
மொத்தம் வாக்காளர் |
|
|
7,55,402 |
மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:
மாவட்டம் |
மொத்தம் |
ஆண்கள் |
பெண்கள் |
இதர |
தென்காசி |
7,55,402 |
3,74,797 |
3,91,571 |
24 |
தென்காசி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:
வ.எண் |
முதல் கட்ட தேர்தல் |
1 |
ஆலங்குளம் |
2 |
கீழப்பாவூர் |
3 |
கடையம் |
4 |
மேலநீலிதநல்லூர் |
5 |
வாசுதேவநல்லூர் |
வ.எண் |
இரண்டாம் கட்ட தேர்தல் |
1 |
தென்காசி |
2 |
செங்கோட்டை |
3 |
கடையநல்லூர் |
4 |
சங்கரன்கோவில் |
5 |
குருவிகுளம் |
யாருக்கு பலம்....? உள்ளாட்சி உள்ளது உள்ளபடி!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பலத்தை காணலாம்.
வ.எண் |
சட்டமன்ற தொகுதிகள் |
1 |
சங்கரன்கோவில் |
2 |
கடையநல்லூர் |
3 |
தென்காசி |
4 |
வாசுதேவநல்லூர் |
5 |
ஆலங்குளம் |
தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் இந்த இரண்டு கட்சிகள் பெற்ற ஓட்டுகள் அடிப்படையில் சொற்ப சதவீதங்கள் வித்தியாசத்தில் தான் அதிமுக - திமுக வாக்கு விகிதம் இருந்தது. சட்டமன்றத் தொகுதியில் கட்சி வாரியாக பெற்ற வெற்றிகள் மற்றும் வாக்குகள் இதோ...
- சங்கரன்கோவில் சட்டமன்றதொகுதி:
வேட்பாளர்கள் |
கட்சி |
பெற்ற வாக்குகள் |
இ. ராஜா |
தி.மு.க |
71,347 |
வி. எம். ராஜலெட்சுமி |
அ.தி.மு.க |
66,050 |
இரா. அண்ணாதுரை |
அ.ம.மு.க |
22,682 |
பி. மகேந்திரகுமாரி |
நாம் தமிழர் கட்சி |
13,851 |
கே. பிரபு |
த.ம.ஜ.க (ம.நீ.ம) |
2,338 |
NOTA |
None Of The Above |
1,957 |
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் இ.ராஜா 5,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரத்தில் அ.ம.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பெற்ற வாக்குகள் கவனிக்கப்பட வேண்டியவை. இந்த இரண்டு கட்சிகள் இணைந்து 36,533 வாக்குகளைப் பெற்றிருந்தன. மேலும் தென் தமிழகத்தில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுகவின் கோட்டை என அதிமுக மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு 30 ஆண்டுகளாக அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கடந்த கால ஆட்சியில் அதிமுகவை சேர்ந்த வி.எம்.ராஜலட்சுமி என்பவர் வெற்றி பெற்றார். அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். அதற்கு பின் அவர் தொகுதியை சரி வர கவனிக்காதது சங்கரன்கோவிலில் அதிமுகவின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தன. இதன் காரணமாக சங்கரன்கோவில் தொகுதி மக்களிடம் அதிமுக தன் நன்மதிப்பை இழந்து திமுக வெற்றி பெற வழிவகுத்தது.
- கடையநல்லூர்சட்டமன்ற தொகுதி:
வேட்பாளர்கள் |
கட்சி |
பெற்ற வாக்குகள் |
கிருஷ்ண முரளி |
அ.தி.மு.க |
88,474 |
முகம்மது அபூபக்கர் |
ஐ.யு.எம்.எல் (தி.மு.க) |
64,125 |
அய்யா துரை பாண்டியன் |
அ.ம.மு.க |
34,216 |
மா முத்துலட்சுமி |
நாம் தமிழர் கட்சி |
10,136 |
எம்.அம்பிகாதேவி |
மக்கள் நீதி மய்யம் |
1,778 |
NOTA |
None Of The Above |
1,056 |
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க-வை சேர்ந்த கிருஷ்ண முரளி 24,349 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரத்தில் அதிமுகவின் பிளவு பிரிவான அ.ம.மு.க-வை சேர்ந்த அய்யா துரை பாண்டியன் என்பவர் 34,716 வாக்குகளை பெற்றிருந்தார். இருந்தும் அ.தி.மு.க-வே கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியை வென்றது. அதிமுகவிற்கு பெரிய அளவில் வாக்குகள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக கடையநல்லூர் உள்ளது.
- தென்காசிசட்டமன்ற தொகுதி:
வேட்பாளர்கள் |
கட்சி |
பெற்ற வாக்குகள் |
பழனி நாடார் |
காங்கிரஸ் (தி.மு.க) |
89,315 |
செல்வ மோகன் தாஸ் பாண்டியன் |
அ.தி.மு.க |
88,945 |
இரா. வின்சென்ட் ராஜு |
நாம் தமிழர் கட்சி |
15,336 |
எஸ். முகமது (எ) ராஜா |
அ.ம.மு.க |
9,944 |
தங்க ராஜ் |
அ.இ.ச.ம.க (ம.நீ.ம) |
2,188 |
NOTA |
None Of The Above |
1,159 |
தென்காசி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை வெற்றி பெற்ற தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்த செல்வ மோகன் தாஸ் பாண்டியன் என்பவரை விட வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா. வின்சென்ட் ராஜு 15,336 வாக்குகளும் அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்த எஸ். முகமது (எ) ராஜா 9,944 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் காரணமாக அ.தி.மு.க தென்காசி சட்டமன்ற தொகுதியில் வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. தென்காசி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க-வை சேர்ந்த செல்ல மோகன்தாஸ் பாண்டியனும் காங்கிரஸை சேர்ந்த பழனி நாடார் என்பவரும் கடுமையான போட்டியாளர்கள். இந்த போட்டி இறுதிச் சுற்றுவரை நீடித்தது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக இங்கு வெற்றியை இழந்துள்ளது.
- வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி:
வேட்பாளர்கள் |
கட்சி |
பெற்ற வாக்குகள் |
சதன் திருமலை குமார் |
ம.தி.மு.க (தி.மு.க) |
68,730 |
மனோகரன் |
அ.தி.மு.க |
66,363 |
சி. ச. மதிவாணன் |
நாம் தமிழர் கட்சி |
16,731 |
சு. தங்கராஜ் |
அ.ம.மு.க |
13,376 |
NOTA |
None Of The Above |
2,171 |
சின்ன சாமி |
அ.இ.ச.ம.க (ம.நீ.ம) |
2,139 |
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தி.மு.க-வின் கூட்டணி கட்சியான ம.தி.மு.க-வைச் சேர்ந்த சதன் திருமலை குமார் என்பவர் 2367 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த மனோகரன் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே அங்கு எம்.எல்.ஏ.,வாக இருந்த மனோகரன் மீது அதிருப்தி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர், இந்த போட்டியில் சரிக்குசரியாக வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து 30,107 வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவின்தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. . இங்கு மக்கள் நீதி மையத்தின் கூட்டணி கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த சின்னசாமி என்பவர் போட்டியிட்டு நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளது.
- ஆலங்குளம் சட்டமன்றதொகுதி:
வேட்பாளர்கள் |
கட்சி |
பெற்ற வாக்குகள் |
மனோஜ் பாண்டியன் |
அ.தி.மு.க |
74,153 |
பூங்கோதை ஆலடி அருணா |
தி.மு.க |
70,614 |
ஹரி நாடார் |
சுயேட்சை வேட்பாளர் |
37,727 |
மு. சங்கீதா |
நாம் தமிழர் கட்சி |
12,519 |
ராஜேந்திர நாதன் |
தே.மு.தி.க (அ.ம.மு.க) |
2,816 |
NOTA |
None Of The Above |
1,786 |
செல்வ குமார் |
அ.இ.ச.ம.க (ம.நீ.ம) |
1,454 |
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பூங்கோதை ஆலடி அருணாவை விட 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு ஹரி நாடார் சுயேட்சையாக போட்டியிட்டார். ஹரி நாடார் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வெகு பரிச்சயமான நபர் என்பதாலும் அவருக்கு 37,727 வாக்குகள் கிடைத்தன. இதனால் வெறும் 3 ஆயிரத்து 539 ஓட்டுகளில் வாக்குகளில் அதிமுக வெற்றி பெற்றது.
தென்காசி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பலம், பலவீனம் உள்ளது உள்ளபடி இதோ!
கட்சி |
பலம் |
பலவீனம் |
தி.மு.க |
கூட்டணி தொடர்கிறது ஆளுங்கட்சி என்கிற சாதகம் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர் பண பலம் |
அனைத்து தொகுதியிலும் அதிமுக பலம் ஏற்கனவே அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க வாக்குகள் உட்கட்சி பூசல் |
அ.தி.மு.க |
கடந்த கால வாக்கு விகிதம் மாவட்டம் முழுவதும் வாக்கு பலம் பண பலம் |
தோல்வியால் சிறிய தேக்கம் நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க வாக்குகள் எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு |
நாம் தமிழர் கட்சி |
சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள் கூட்டணி இல்லாதது |
உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள் பண பலம் |
மக்கள் நீதி மய்யம் |
கமல் என்கிற அடையாளம்
|
கட்சியில் ஏற்பட்ட பிளவு மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை பண பலம் |