கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவராக இருந்த தமிழிசை சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை கண்ட சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி, பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து இந்த சம்பவத்தில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை அடுத்து, தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழிசை முன்பு பாஜகவை விமர்சித்த மாணவி சோபியாவை கைது செய்வதில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டாம் என தெரிவித்த நீதிபதி, மாணவியின் தந்தைக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
பிற முக்கியச் செய்திகள்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்