தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் தவிர அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 31ஆம் தேதி கட்டுபாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.






 


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை 


தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.


கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கப்படுகிறது. மேலும், தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.


1. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.


2. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.


மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.


மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசாங் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் சுவசம்  அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேஎண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவனை தடுப்பூசினை செலுத்திக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண