கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை நேரில் பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது "ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகள் உட்கொள்வதைத் மக்கள் தவிர்க்க வேண்டும். ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுப்பொருட்கள் அந்த நாட்டின் தட்ப வெப்பநிலைக்கே பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது” என்று கூறினார்.
கேரளாவில் கடந்த வாரம் ஷவர்மா சாப்பிட்ட 17 வயதான இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 18 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஷவர்மா கடைகளை மூட அந்த மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் ஷவர்மா, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட வெளிமாநில, வெளிநாட்டு உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். இந்த சூழலில் அமைச்சர் ஷவர்மா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்