சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனி பிருந்தாவன் நகர் பகுதியை ராஜகோபால் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த மாதம் மார்ச் அமெரிக்காவிலுள்ள சுனந்தா மகளின் பிரசவத்திற்காக சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர். அங்கிருந்து இவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இவர்களை அழைத்து வந்து வீட்டில் இறக்கியுள்ளார்.
தனது தாய், தந்தை இருவரது செல்போனும் Switch Off ஆகிருந்ததால், சந்தேகம் அடைந்த சுனந்தா, தனது உறவினரான திவ்யாவை (இந்திரா நகர் அடையார்) தொடர்புகொண்டு சொன்னபோது, திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் 12.30 மணி அளவில் வீட்டை வந்து பார்க்கும்போது வீடு பூட்டி இருந்தது. இதனால், அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், இருவரும் இல்லாத காரணத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் (100 Calls) கொடுக்கப்பட்டு, மயிலாப்பூர் துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
மாலை சுமார் 6.30 மணியளவில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஒருவர் இருவரையும், ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் வைத்து அவர் ஓட்டி சென்ற சொகுசு காருடன் பிடித்துள்ளனர். கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீ காந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிசேரி கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே ஸ்ரீ காந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.
தற்போது பண்ணை வீட்டில் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். மேலும் இவர்களை கொலை செய்துவிட்டு 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்