தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 211 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,54,763 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு  3,211  ஆக உள்ளது.

Continues below advertisement

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  10 ஆயிரத்து 59 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 234 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 189 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 189 ஆக உள்ளது. கோவை 366, ஈரோடு 259, சேலம் 205, திருப்பூர் 185, தஞ்சாவூர் 190, செங்கல்பட்டு 164, நாமக்கல் 97, திருச்சி 129, திருவள்ளூர் 87, கடலூர் 92, திருவண்ணாமலை 96, கிருஷ்ணகிரி 62, நீலகிரி 125, கள்ளக்குறிச்சி 89, கன்னியாகுமரி 55, மதுரை 51, தருமபுரி 76, விழுப்புரம் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 57 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,253 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 13 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8244 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 7 மற்றும் சென்னையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்பால் 13 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 33,665 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,565 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,43,171 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


12 வயதிற்குட்பட்ட 149 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40547 ஆக்சிஜன்வசதி கொண்ட படுக்கைகளும், 27069 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6975 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

மாவட்டம் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை இன்றைய பாதிப்பு எண்ணிக்கை
நீலகிரி  110 125
கள்ளக்குறிச்சி 70 89

நேற்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இன்று நீலகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகபட்சமாகக் கோவையில் மற்றும் சென்னையில் அதிகரித்துள்ளது.  

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Also Read: ஏ.கே.ராஜன் கமிட்டியை அமைத்தது செல்லாது : சொல்கிறது மத்திய அரசு!