நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருவதால் நாடாளுமன்ற கூட்ட தொடரில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, வேலையின்மை குறித்து காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு எம்பி ஜோதிமணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


 


இது தொடர்பாக எம்பி ஜோதிமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “நாங்கள் நாடாளுமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. நாங்கள் விலை வாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே எழுப்பினோம். ஆனால் அதற்காக சபநாயகர் ஓம்.பிர்லா எங்களை இடைநீக்கம் செய்துள்ளார். 


 






இப்படி தான் பெண் எம்பிக்கள் நடத்துப்படுவதா.. எங்களுக்கு மரியாதை மற்றும் மாண்பு கிடைக்காதா? இந்த விஷயங்கள் எங்களை தடுக்காது. எனினும் மிகவும் வேதனை பட வேண்டிய விஷயமாக அமைந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 


 


மேலும் அந்தப் பதிவுடன் அவருடைய ஆடையை கிழித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக மக்களவையில் எம்.பி ஜோதிமணி, எம்பி மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின்னர் நேற்று மாநிலங்களவையில் 16 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண