CM Stalin: முதலமைச்சர் துறைக்கே இந்த நிலைமையா? கருணாநிதி பெருமைக்கே ஆப்பு? ஸ்டாலின் ஆக்ஷன் எடுப்பாரா?
EPS On CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ள, மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் பயனாளிகளுக்கு 3 மாதங்களாக மாதந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

EPS On CM Stalin: மாற்றுதிறனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக மாதந்திர உதவித்தொகை வழங்கப்படாததற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய அமைச்சரவைகள் உள்ளன. அவற்றில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை எப்போதும் தனக்கு தனி முக்கியத்துவம் வாய்ந்தது என ஸ்டாலினே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, “மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு"மாற்றுத்திறனாளிகள்" என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்” என மார்தட்டி பெருமை பேசுவது உண்டு.
பெருமை பேசினால் மட்டும் போதுமா?
அதன் காரணமாகவே இன்றளவும் அந்த துறையை தன்வசமே வைத்து தேவையான நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், அப்படி பெருமை மட்டுமே பேசினால் போதுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனென்றால், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அன்றாட தேவைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டிய மோசமான சூழலை தவிர்க்க உதவுறது. ஆனால், கடந்த மூன்று மாதாங்களாக மாற்றுதிறனாளிகளுக்கான, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் துறையே இப்படியா?
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. கருணாநிதி பெயரில் இசிஆர் சாலையில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா?
தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையை காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உதவித்தொகை இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனடியாக உதவித்தொகை நிலுவைகளை வழங்கி, மாதாந்திர உதவித்தொகை தவறாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
சுயமாக வருமானம் ஈட்ட முடியாமல் தவிக்கும் மாற்று திறனாளிகளுக்கு, அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால், அந்த உதவியும் நிறுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கருத்தில் கொண்டு, பயனாளர்களுக்கு உதவித்தொகை சென்றடைய விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.