இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ரியாக்‌ஷன்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து ஆளுநர் காலதாமதப்படுத்துவதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து ஆளுநர் காலதாமதப்படுத்துவதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் “ஆளுநர் விவகாரட்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தம்ழிஅக அரசு பெற்றுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. மற்ற இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை பார்த்து உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.” எனப் பேசினார்.

மேலும் ”எனது கொள்கையில் என்றும் உறுதியாக இருப்பேன். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. அவை முன்னவர் மடியில் நான் வளர்ந்தவன் என்பதால் கொள்கையில் உறுதியோடு இருப்பேன். அதிமுக, பாஜகவை தவிர மற்ற உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஆளுநர் செயல்பாடு நேர்மையாக இல்லை என தெரிவித்துள்ளது.

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Continues below advertisement