நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்திற்காக சன் தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விஜய் தளபதியில் தான் தலைவன் ஆவது ரசிகர்கள் கையில்தான் உள்ளது என்று கூறினார். அவரது இந்த கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், சிலர் தரப்பில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது. அதனை அடுத்து, ப்ரொமோஷனின் ஒரு பகுதியாக அப்படத்தின் பாடல்கள் வெளியாகின. அதில், கடைசியாக வெளியான பீஸ்ட் மோட் பாடல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அப்பாடலை ஓடவிட்டு ரீல்ஸ்களும், வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலனின் ‘பீஸ்ட்’ வெர்ஷன் இன்று வெளியாகி இருக்கிறது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் டாக்டர். மகேந்திரன் பகிர்ந்திருக்கும் வீடியோவில், பீஸ்ட் பாடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் வீடியோக்கள் பொறுத்தப்பட்டு எடிட் செய்யப்பபட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 






முதலமைச்சராக பதவியேற்று மே 7-ம் தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்ய இருக்கிறார் ஸ்டாலின். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்த வீடியோ எடிட்டை வெளியிட்டிருக்கிறது திமுக தகவல் தொழில்நுட்ப அணி. 


முன்னதாக, தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை  பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என்றும், மாநில உரிமை - மொழி உரிமை  காத்திட, கண்ணும் கருத்துமாக,  தொடர்ந்து பாடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதினார்.


தமிழ்மொழி - தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் உத்வேகமாகப் பயணிக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையில் பணிபுரியும்  திராவிட முன்னேற்றக் கழக அரசு என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண