எம்ஜிஆர் படம் வெளியாகும்போது முதல் நபராக நான் படம் பார்ப்பேன், அவருடன் 
நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை, ஆர்.ஏ.புரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் பொன்மனச் செம்மல் எம்.ஜிஆர் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.


அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைத்தது. எம்.ஜி.ஆர் படம் வெளியாகும்போது முதல் ஆளாக பார்ப்பேன். அதிமுகவை விட திமுகவில்தான் எம்.ஜி.ஆர் அதிகம் இருந்தார். படம் வெளியானால் முதலில் என்னிடம்தான் எம்.ஜி.ஆர் கருத்து கேட்பார். எம்.ஜி.ஆரை சார் என்று கூப்பிட்டால் அவருக்கு பிடிக்காது. எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி தொடங்க உதவியவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் என்மீது அதிக அன்பு வைத்திருந்தார்.


என்னை நன்றாக படிக்க சொல்வார். பெரியப்பா என்ற முறையில் அறிவுரை கூறுவதாக எம்.ஜிஆர் தெரிவித்தார். தமிழ் உள்ளிட்ட 6 மொழிகள் நன்கு தெரிந்தவர் ஜானகி. 31 படங்களில் நடித்துள்ளார் ஜானகி. மருதநாட்டு இளவரசி படத்தில் 3 முதலமைச்சர்களின் பங்கு இருந்தது. ஜானகி நிறைய திறமை கொண்டவர். சிலம்புகலை கற்றவர்” எனப் பேசினார். 


 






மேலும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியை கடந்து செல்லும்போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.


டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி உருவாக துணையாக இருந்தவர் கருணாநிதி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.