கரூர் மாவட்டத்தில் முடிவற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 76 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 1-ம் தேதி கரூர் வருகை தர உள்ளார். இதற்காக மேடை மற்றும் மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடு பணிகள் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


 




 


மேலும், என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 



அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இரவு பயணியர் விடுதியில் தங்கும் முதல்வர் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், அனைத்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் கோரிக்கைகளை கேட்க உள்ளார்.


 





அடுத்த நாளான 2ம் தேதி காலை 10 மணியளவில் திருமாநிலையூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்கள் துவக்க விழா மேடைக்கு வர உள்ளார். காலை 9 மணி முதல் 10 மணி வரை பயணியர் விடுதி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சாலையின் இரு புறமும் 23 இடங்களில் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் வரவேற்பு அளிக்க உள்ளனர். 76 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார் என்றார். வரும் 1 மற்றும் 2ம் தேதிகள் கரூர் மாநகரப் பகுதி திருவிழா போல் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


 



முன்னதாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் செயல்படுவது குறித்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொழில் துறை சார்பில் முதல்வரிடத்தில் முன் வைக்கப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் குறித்து, கரூர் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து மனுக்களாக வாங்கிக் கொண்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண