தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை (01.03.2024) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 7.25 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்த கட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.
பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடங்கும் பொதுத் தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. நாளை (01.03.2024) பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை
மார்ச் 1 ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5 ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 11 ஆம் தேதி, வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 15 ஆம் தேதி, கணினி, இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்விகள் நடைபெறுகிறது.
கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உள்ளிட்ட பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன.
பொதுத்தேர்வுகள்- மாணவர்கள் கவனத்திற்கு..