எதிர்கட்சிகளின் பிரதாமர் வேட்பாளர் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.


ஏபிபி செய்திதளம்..!


ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது.  இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின்  பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார். 


முன்வைக்கப்பட்ட கேள்விகள்:                                  


எதிர்கட்சிகள் கூட்டணி பிரதமர் வேட்பாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளதா, திமுக நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளது, பாஜக ஆளாத மாநிலங்களில் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பேசுபொருளாகி இருப்பது  தொடர்பான  கேள்விகள் முன் வைக்கப்பட்டன. 


முதலமைச்சர் ஸ்டாலின் பதில்..! 


ஏபிபி தரப்பில் முன்வக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சிகளின் கூட்டணி தங்களது இலக்கு என்ன என்பதில் தெளிவாக உள்ளது என விளக்கமளித்துள்ளார்.  திமுக ஏன் வலிமையாக உள்ளது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார். ”மோசமான, இழிவான பாதையில் பாஜக செயல்படுகிறது” என காரசாரமாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


இன்று காலை 11 மணிக்கு..


மக்கள் சார்பில் ஏபிபி-யால் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விரிவான பதில்கள் இன்று காலை 11 மணியளவில் முழுமையாக வெளியாக உள்ளன. அதுதொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும் காண, ஏபிபி நாடு செய்தி தளம் மற்றும் ஏபிபி நாடு யூடியூப் சேனலுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.