கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்கள் இருப்பிடத்திற்கு வீடு வீடாக சென்று வழங்கும் பணி துவங்கி உள்ளது.


 




கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


 




 


கரூர் மாநகராட்சிக்கு, உட்பட்ட ராயனூர் பகுதியில் வீடு வீடாகவும், நாடக மேடைகளிலும் பொதுமக்கள் இருப்பிடத்திற்கு சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பத்தை ரேஷன் கடை பணியாளர்கள் விநியோகம் செய்தனர். கரூர் மாவட்டத்தில், மொத்தம் 583 நியாய விலைக் கடைகளும், 3 லட்சத்து 38 ஆயிரத்து 871 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், முதல் கட்டமாக நடைபெறும் முகாமில் பங்கேற்கும் வகையில் 390 நியாய விலை கடைகளை சேர்ந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 386 அட்டைதாரர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை  நேரடியாக  வழங்கி வருகின்றனர்.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண