MK Stalin Kongu Visit Live : மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு
MK Stalin Kongu Visit Live : சேலம் இரும்பு உருக்காலையில், 500 ஆக்ஸிஜன் சிலிண்டர் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா மையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத மூதாட்டிக்கு உதிவிய இளையராணி என்ற இளம்பெண்ணை முதல்வர் இன்று நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
இரும்பாலையில் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 500 படுக்கை வசதி கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை மையமானது ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனிடையே உருக்காலை வளாகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 ஒரு படுக்கை வசதிகளை அமைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்தமாக ஆயிரம் படுக்கை வசதிகளோடு செயல்படவிருக்கும் இந்த மையத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் உருக்காலையில் உற்பத்தி செய்து நேரடியாக வழங்கப்படுகிறது.
சேலத்தில் கொரோனா ஆய்வு பணிகள் முடித்துக் கொண்டு திருப்பூர் செல்லும் வழியில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பணியிலிருந்த மருத்துவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இம்மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்ள வசதிகள் குறித்தும், கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர்களிடம்
கேட்டறிந்தார்.
சேலம் உருக்காலையில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். திறந்து வைத்த பின் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5145 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருகினனர். 24 மணி நேரத்தில் 15 கொரோனா தொடர்புடைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிகிச்சைப் பெற்று வருபர்களில் (5145), 502 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளிலும், 2195 பேர் ஆக்சிஜன் பொருந்திய படுக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சற்று முன் சேலம் மாவட்டத்தை சென்றடைந்தார் . முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்.
சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் தயாராகும் கொரோனா சிகிச்சை மையத்தை ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முதல்வர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
Background
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சேலம், திருப்பூர், கோவை, திருச்சி. மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன். முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது என்பதால் கட்சியினர் என்னைச் சந்திக்கவோ - வரவேற்புக் கொடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. அனைவரின் நலனும் மிக முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -