Lakshmanan: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த மதுரை வீரர் லட்சுமணன் குடும்பத்தாருக்கு முதல்வர் 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆளுநர் ரவியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 


இன்று மதியம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்த இராணுவ வீரர், லட்சுமணன் அவர்களும் ஒருவர். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது வீர மரணம் அடைந்த மூன்று வீரர்களுக்கும் எனது அஞ்சலியையும், வீர வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும், வீர மரணம் அடைந்த மதுரை வீரர் லட்சுமணன் குடும்பத்தாருக்கு முதல்வர் 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.  இதற்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய் நாட்டைக் காக்கும் பணியில்  தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு இரங்கல் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு. இலட்சுமணன் அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவியையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். 






அதேபோல் தமிழக ஆளுநர் ரவி அவர்களும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மூன்று ராணுவ வீரர்களுகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிறாத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 


ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை ரஜெளரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்கு அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மதுரை புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் தாக்குதலில் உயிரிழந்தார். 


இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் சுபேதர் ராஜேந்திர பிரசாத்( Subedar Rajendra Prasad), மனோஜ் குமார் (Manoj Kumar), மற்றும் தமிழ்நாடு வீரர் லட்சுமணன் (Lakshmanan) வீர மரணம் அடைந்துள்ளனர் என்று காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தப் பகுதியில் இது தொடர்பாக,  இராணுவ வீரர்கள் தேடுதல் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில்,  ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண