தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை கீழே காணலாம்.



  • வயது முதிர்ந்த 591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்

  • சென்னை சங்கமம் கலை விழா போல 8 நகரங்களில் சங்கமம் கலை விழா நடத்தப்படும்

  • தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

  • இலங்கை தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்

  • நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாடு ராணுவ வீரர்களுக்கான இழப்பீடு ரூபாய் 20 லட்சத்தில் இருந்து ரூபாய் 40 லட்சமாக அதிகரிப்பு

  • 35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டம் விரிவுபடுத்தப்படும்.

  • சென்னை, கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.

  • அரசு பள்ளிகளில் ரூபாய் 1500 கோடி செலவில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • பல்வேறு துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

  • மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூன் மாதம் முதல் செயல்படும்

  • குடிமை பணி தேர்வுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்விற்கு தயாராக மாதத்திற்கு 7,500 ரூபாய் 10 மாதங்களுக்கும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

  • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய சிறப்பு சட்டம் இயற்றப்படும்.

  • மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் 1000ல் இருந்து 1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 1500ல் இருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

  • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 500 கோடியில் விரிவுபடுத்தப்படும்.

  • 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • ஈரோடு, அந்தியூரில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் என்ற புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும்.

  • 2 ஆயிரம் கோடி மதிப்பில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும்.

  • . 1500 கோடி செலவில் அடையாறு ஆறு மறுசீரமைக்கப்படும்.

  • 621 கோடி ரூபாயில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்குவழி மேம்பாலம் கட்டப்படும்.

  • 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பூந்தமல்லி – கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கோவை மெட்ரோ ரயில் திட்டம் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

  • மதுரையில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

  • சேலத்தில் ஜவுளிப்பூங்கா 800 கோடி மதிப்பில் 119 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும்.

  • ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

  • விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூரில் புதிய சிப்காட் தொழில்பூங்காக்கள் அமைக்கப்படும்.

  • சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை. திருச்சி, சேலத்தில முக்கிய பொது இடங்களில் இலவச வை-பை

  • ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் புதிய ஐ.டி. பூங்காக்கள் அமைக்கப்படும்

  • தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது


மேலும் படிக்க: 1000 Rs For Ladies:: அப்படி போடு.. வெளியானது குடும்பத் தலைவிகளுக்கான ரூ. 1000 அறிவிப்பு.. எப்போதிலிருந்து தெரியுமா?


மேலும் படிக்க: TN Budget 2023: மகளிர் கவனத்திற்கு.. மகளிர் சுய உதவிக்குழுக்கான வங்கி கடன் உயர்வு: எவ்ளோ தெரியுமா?