தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதிமுக - பாஜக இடையே கூட்டணி இருந்தாலும், அதிமுக-வில் நடக்கும் உட்கட்சி மோதல் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

Continues below advertisement

சிவி சண்முகத்தை சந்தித்த நயினார்:

இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை, முன்னாள் அமைச்சரும். தமிழ்நாடு பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து, நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

திண்டிவனத்தில் சிவி சண்முகத்தை சந்தித்ததில் எந்த வியப்பும் இல்லை. கூட்டணி கட்சித் தலைவர். சென்னையில் இருந்து காரில் திருச்சி வரும்போது அவர் வீட்டில் இருந்தார் சந்தித்து பேசினேன். கூட்டணி மட்டும் வைத்து ஓட்டுபோடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், கூட்டணி அவசியம். இரண்டையும் நாம் பார்க்க வேண்டும். 2001ல் பலம் வாய்ந்த கூட்டணி கலைஞர் ( கருணாநிதி) வைத்திருந்தார். ஆனால், அம்மா (ஜெயலலிதா)தான் ஆட்சிக்கு வந்தார். 

Continues below advertisement

கூட்டணி:

1980ல் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியை திமுக, காங்கிரஸ் கட்சிகள் வைத்திருந்தனர். ஆனால், எம்ஜிஆர் சின்ன சின்ன கட்சியை வைத்திருந்தார். அன்று மீண்டும் எம்ஜிஆர்தான் முதலமைச்சர் ஆனார். 

செங்கோட்டையன் 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அதிமுக-வின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று நடத்தியவர். அனுபவம் வாய்ந்தவர். இருந்தாலும் நாட்டு மக்கள் இன்று திமுக அரசு வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளனர். 

ஆட்சி மாற்றப்பட வேண்டும்:

அவர்கள் ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்களின் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதே தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை ஆகும். மு.க.ஸ்டாலின் எனக்கு எப்பவுமே நண்பர்தான். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஏற்கனவே அண்ணா யுனிவர்சிட்டி சார் வேறு. இப்போ சொல்லும் சார் வேறு. இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டிய ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார். 

தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இந்த தேர்தலைச் சந்தித்தாலும், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணி என்று ஏற்கனவே பிரிந்துள்ள அதிமுக தற்போது செங்கோட்டையன் தரப்பு என்றும் உட்கட்சி மோதலால் சரிந்து கிடப்பது மிகப்பெரிய கலக்கத்தை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணிக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 

அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே பெரிய கட்சியாக இருக்கும் சூழலில், பாமக-வையும் உள்ளே கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக- பாஜக கூட்டணிக்கு திமுக மட்டுமின்றி வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக-வும் மிகப்பெரிய பாேட்டியாக மாறியுள்ளது. மறுபக்கம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் மிகப்பெரிய பாேட்டியாக மாறியுள்ளது.