தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தை தொடர்ந்து தி.மு.க.வின் ஊழல் ஆட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாரா? என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழூப்பியுள்ளார். 


கடந்த 14-ஆம் தேதி,பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து தி.மு.க.வின் சொத்து பட்டியலை ’DMK Files’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் இரு்ந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அண்ணாமலையின் குற்றசாட்டுகளுக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியருந்தனர்.


பி.டி.ஆர். ஆடியோ விவகாரம்:


கடந்த 19-ஆம் தேதி சமூக வலைதளங்களில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசுவது போன்ற 28 நொடிகளுக்கு ஆடியோ ஒன்று வெளியானது. அதில், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் வருமானத்து அதிகமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அண்ணாமலை கேள்வி 


இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வௌியிட்ட அறிக்கையில், 'உதயநிதி ஸ்டாலின் மற்றும்  சபரீசன் ஆகிய இருவர் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளார்கள் என்று பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். நாங்கள் இந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிட்ட ’DMK Files’ என்ற காணொலிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது தமிழக நிதி அமைச்சரின் பேச்சு.


இப்போது வரை அதற்கு, தி.மு.க. அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருப்பது அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.


கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம்


கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு ISIS தற்கொலைப்படை தாக்குதல் என்பதை முதல் நாளிலிருந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சொல்லி வந்ததை நேற்று மீண்டும் ஒரு முறை தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதை இன்று வரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது திமுக. திமுகவினரின் ஆட்சி அதிகார மமதையால் தினந்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர்.


ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் குடும்பம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்திருப்பது என இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராகவும் மக்கள் விரோதமாகவும் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது.


முதலமைச்சர் பொறுப்பேற்பாரா?


ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதில் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. கட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது."




மேலும் வாசிக்க..


Annamalai: '500 கோடியும் வழங்க முடியாது.. மன்னிப்பும் கேட்க முடியாது..' - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!


குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு: இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கும் சி.பி.சி.ஐ.டி...!