வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.


இதன் காரணமாக,  21.04.2023: தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


22.04.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


23.04.2023 மற்றும் 24.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


25.04.2023: தமிழகத்தில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை : 


21.04.2023 மற்றும் 22.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு   வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாட்டி வதைக்கும் வெயில்:


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் மதுரையில் 40.8 டிகிரி செல்சியஸ், கரூரில் – 40.5 டிகிரி செல்சியஸ், வேலூர் – 40.4 டிகிரி செல்சியஸ், திருச்சி – 40.3 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 39.6 டிகிரி செல்சியஸ், சேலம் – 39.5 டிகிரி செல்சியஸ், நாகை – 38.4 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை – 38.7 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 39 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 38.8  டிகிரி செல்சியஸ், தர்மபுரி – 38.5 டிகிரி செல்சியஸ், கடலூர் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாகையில் 4.3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல் கடலூரில் இயல்பை விட 3.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் – 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். சென்னை நுங்கம்பாக்கத்தில் – 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.