முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாலை 5 மணிக்கு படத்தை திறந்து வைக்கிறார். கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால், புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, கருணாநிதி படத்திறப்பு விழாவுக்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.