தஞ்சை தேர் விபத்து தொடர்பாக பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.


தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமம் அப்பர் கோயில் சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாக தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார். திருவிழாக்களில் போதிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. மேலும், தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தேர் விபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 


இந்நிலையில், விபத்து தொடர்பாக பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயக்கர் அப்பாவு வெளியேற்றினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு தீர்மாணத்தில் பேசி முடித்து வெளிநடப்பு செய்தபின்பு எங்கிருந்தோ ஞானோதியம் வந்தது போல மீண்டும் அவையில் வந்து பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை என தெரிவித்திருக்கிறார். 


மேலும், தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய இந்து சமநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் நடந்த தேர் திருவிழா என தெரிவித்திருக்கிறார். மேலும், கோவில் விழாவில் நடைபெற்றது திருவிழா அல்ல, சப்பர ஊர்வலம் என தெரிவித்திருக்கிறார். திருவிழாவை கிராம மக்களே ஒன்று கூடி நடத்தி உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 






முன்னதாக, கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிர்வாகம், சட்டம், செய்தி மற்று ஒலிபரப்புத்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண