செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வரும் சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, “குடியரசு தலைவருக்கான் அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்தி இருப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களெல்லாம் நீட் தேர்வு எழுதியா மருத்துவர்கள் ஆனார்கள்? தமிழ்நாடு மக்களை ஆளுநர் மிகவும் அவமானப்படுத்தியாக காங்கிரஸ் கருதிகிறது. தமிழ்நாடு மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் நிராகரித்துள்ளார். ஆளுநர் அனுப்பிய குறிப்பு தமிழ்நட்டு மக்களை வேதனைப்படுத்தியுள்ளது. ஆளுநர் நிறைய முதலமைச்சர்களைப் பார்த்திருக்கலாம். நம் முதலமைச்சர் சமூக நீதிக்காக போராடும் முதலமைச்சர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஹைவோல்டேஜ் முதலமைச்சர். அவரை நெருங்கவே முடியாது” என தெரிவித்துள்ளார். 






தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 5-ந் தேதி சிறப்பு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. 



இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு மசோதாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தகவல். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண